சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் இருக்கும் கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, சமீபத்தில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாணயம் சென்னையில் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த மத்திய மந்திரி, பாஜக மாநில தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் திமுக இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அவர்கள் அந்த கூட்டணியின் தேசிய தலைவர்களான சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்கள், ராகுல் காந்தி ஆகியோரை அழைக்கவில்லை. திமுக ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு ஊழல் நிறைந்த ஆட்சியாக மாறிவிட்டது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வந்த போது அவருக்கு சிறப்பு புகழ் சேர்க்கும் விதமாக அதிமுக சார்பில் நாங்களும் நாணயங்களை வெளியிட்டோம். அந்த நாணயத்தை முதலமைச்சர் ஆக இருந்த நான் வெளியிட்டபோது அதை சிறுமைப்படுத்தி பேசியது சிறுபிள்ளைத்தனமானது. எம்ஜிஆர் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் என்பதை அறியாமல் பாஜக தலைவர் பேசுகிறார். அவர் 1984 இல் தான் பிறந்துள்ளார். அவர் பிறப்பதற்கு முன்பே எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்து மக்களின் நன்மதிப்பை பெற்று பாரத ரத்னா விருது பெற்றவர்.

எம்ஜிஆர் கொள்கைகள் திட்டங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. அப்போது உங்கள் தலைவர்கள் யாரும் எந்த பதிவிலும் இல்லை. பாஜகவின் அடையாளத்தை வைத்து தான் நீங்கள் வெற்றி பெற முடியும். கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவின் கடன் 55 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 168 கோடியாக அதிகரித்துவிட்டது. அப்படி என்ன திட்டங்களை கொண்டு வந்தீர்கள்? தேர்தல் பிரச்சாரத்தின் போது கோயம்புத்தூரில் 500 நாட்களில் 100 திட்டம் கொண்டு வருவேன் என கூறியதெல்லாம் பொய்.

அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் பல்வேறு துறைகள் வளர்ச்சி பெற்று பல விருதுகளை பெற்றது. ராஜ்நாத் சிங் கருணாநிதியை புகழ்ந்தது ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசியதை நான் வரவேற்கிறேன். திமுக- பாரதிய ஜனதா வெளியே எதிரியாகவும், உள்ளே உறவாகவும் இருக்கின்றனர். ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் பந்தாடப்பட்டு வருகிறார்கள். அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தவர் என்பதால் தலைகால் புரியாமல் ஆடுகிறார். அவருக்கு வாய் தான் முதலீடு. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் புயலுக்கு எந்த நிவாரணமும் வாங்கி கொடுக்கவில்லை. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் மாநில உரிமைகள் கொடுத்து வருகிறோம் என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.