தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வருகிற 31-ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் வைத்து ஃபார்முலா நான்கு கார் பந்தயத்தை நடத்த முடிவு செய்திருக்கிறது. இந்த பந்தயத்தை கடந்த டிசம்பர் மாதமே நடத்த திட்டமிட்டனர். ஆனால் ஒரு சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் பந்தயத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது குறித்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது, சுமார் 8000 பேர் அமர்ந்து கார் பந்தயத்தை பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட இருக்கிறது. பொதுமக்கள் சனிக்கிழமை அன்று காலை கார் பந்தயத்தை இலவசமாக பார்க்கலாம்.

இதனை அடுத்து சனிக்கிழமை மதியத்திற்கு மேல் தகுதி பெற்று போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இரவு 10.40 மணி வரை கார்பந்தய போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் கார் பந்தயம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.