தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். திரைப்பட இயக்குனர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருந்த இவர் இறுதியில் அரசியல்வாதி ஆனார். மக்களால் கேப்டன் என்று அழைக்கப்படும் இவர் 2023 டிசம்பர் 28 அன்று இயற்கை எய்தினார்.

இந்நிலையில் தற்போது இவருக்கு 71 வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. பிறந்தநாள்விழாவில் கலந்து கொண்ட அவரது மகன் சண்முகபாண்டியன் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.