
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிகராகவும் வில்லனாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் தன்னால் முடிந்த உதவிகளை இயலாத நடிகர்களுக்கு செய்து வருகிறார்.
இந்த நிலையில் காமெடி நடிகர் தெனாலியின் மகன் வின்னரசனுக்கு நடிகர் விஜய் சேதுபதி கல்லூரி கட்டணம் செலுத்தி உதவியுள்ளார். தெனாலியின் சூழ்நிலையை நடிகர் பாபா லட்சுமணன் விஜய் சேதுபதிக்கு தெரியப்படுத்திய நிலையில் உடனே சென்று உதவி செய்துள்ளார். தனது சந்ததி கல்வியிலும் வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயர விஜய் சேதுபதி செய்த உதவியை வாழ்நாளில் நானும் எனது மகனும் மறக்கவே முடியாது என்று தெனாலி உருக்கமாக கூறியுள்ளார்.