தமிழ் சினிமாவைப் பற்றி பேசினாலே நம் மனதில் தோன்றும் முதல் 2 ஹீரோக்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் தான். அனால் 90 ஸ் காலத்தில், மற்றொரு நடிகரான அரவிந்த் சாமி விஜய், அஜித்தை விட பெரிய நடிகராக இருந்தார். இருப்பினும் இவர் திரைப்படங்களை விட்டு விலகியதோடு, பின்னர் மீண்டும் திரைப்படங்களுக்கு திரும்பினார். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய “தளபதி” படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் “ரோஜா” மற்றும் “பாம்பே” படங்களில் நடித்தார். இந்த 2 படங்களும் தேசிய அளவில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தேசிய விருது பெற்ற “மின்சார கனவு” திரைப்படத்தில் நடித்தார். அந்த வருடமே ‘சாத் ரங் கே சப்னே’யில் ஜுஹி சாவ்லாவுக்கு ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார்.
பின்னர் இவர் நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சரியாக செயல்படாததால், “சாசனம்” படத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தினார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து “கடல்” திரைப்படத்தில் மீண்டும் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து “தனி ஒருவன்”, “போகன்” போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். இதையடுத்து “தலைவி” என்ற படத்தில் எம்.ஜி ராமச்சந்திரனாக நடித்து பாலிவுட்டில் மீண்டும் அறிமுகமானார்.
