
கொல்கத்தாவில் மருத்துவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேற்கு வங்காளத்தில் ஒரு இளைஞர் பெண் மருத்துவரிடம் தனது உடலை காட்டிய வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை மருத்துவர் சங்கத்தின் தலைவர் மனீஷ் ஜங்கரா வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், மருத்துவரின் கிளினிக்கிற்குள் நுழையும் ஒரு நபர் தனது உடலை காட்டிவிட்டு தப்பி ஓடுவது தெளிவாக உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் அவரை வெளியே அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தா போலீசால் வரும் 18-ஆம் தேதிக்குள் விசாரணை முடிக்கப்படாவிட்டால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விடுவதாக தெரிவித்துள்ளார்.