
நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகத் துறையில் 111 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. உதவி பொறியாளர். டிராப்ட்ஸ்மேன், சானிடரி இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கு 35,400 முதல் ஒரு லட்சத்து 38 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.