இந்தோனேசியாவில் அசிம் இரியாண்டோ என்ற 65 வயது முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஆவார். இவருடைய பக்கத்து வீட்டில் சிரேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 45 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் முதியவர் அடிக்கடி எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று அக்கறையில் விசாரித்துள்ளார். இவர் அடிக்கடி விசாரித்த நிலையில் சம்பவ நாளிலும் மீண்டும் அதே போன்று கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த சிரேகர் முதியவரை அவருடைய மனைவியின் கண்முன்னே கட்டையால் அடித்துக் கொன்றார்.

அதாவது கடந்த மாதம் 29ஆம் தேதி திடீரென சிரேகர் முதியவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார். அதன் பின் அவரை கட்டையால் அடித்துக் கொன்றார். அதாவது முதியவர் அடிக்கடி எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று அவரிடம் கேட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் கோபத்தில் அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வீட்டின் கதவை உடைத்து கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ள நிலையில் அடிக்கடி திருமணம் எப்போது செய்து கொள்ளப் போகிறாய் என்று அவர் கேட்டதால் மனவேதனையில் அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.