
கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் 3 பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் நிலச்சரிவினால் ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டது. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான மக்கள் சிக்கிக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களை மீட்கும் பணி நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் நிலச்சரிவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதன்படி 270 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் சூர்யா “வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது” என்று வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது x -தளத்தில், “வயநாடு நிலச்சரிவு சம்பவதால் எனது இதயம் நொறுங்கிவிட்டது..!. எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது பிரார்த்தனைகளை தெரிவித்துக் கொள்கிறேன்..!! மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு ஏஜென்சிகள் மற்றும் பொது மக்களுக்கும் மரியாதையை செலுத்துகிறேன் ” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
.#WayanadLandslide my thoughts and prayers with the families.. Heartbreaking..! Respects to all members of Government agencies and people on the field helping the families with rescue operations 🙏🏼
— Suriya Sivakumar (@Suriya_offl) July 31, 2024
“>