தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென தனி ‌ ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருந்தவர் நெப்போலியன். இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி குணால் மற்றும் தனுஷ் என இரு மகன்கள் இருக்கும் நிலையில் இதில் தனுஷ் பிறவியிலேயே உடல் நலக்குறைவுடன் பிறந்தவர். இதனால் தன்னுடைய மகனின் மருத்துவத்திற்காக அமெரிக்காவில் குடும்பத்துடன் நெப்போலியன் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் நெப்போலியனின் மகன் தனுஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதாவது திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன் தனுஷுக்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த விழாவில் நெப்போலியன் மற்றும் அவருடைய மனைவி மட்டுமே மணமகள் வீட்டிற்கு வந்தனர். அவருடைய மகன் அமெரிக்காவிலிருந்து வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்றார். இவர்களுடைய திருமணம் டோக்கியோவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியான நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் சில நெட்டிசன்கள் சர்ச்சையான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் தனுஷ் மற்றும் அக்ஷயா ஜோடிக்கு வாழ்த்துக்களும்  குவிந்து வருகிறது.