
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் செல்போன் என்னுடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்ணை மறந்துவிட்டால் அல்லது தொலைத்து விட்டால் அதனை எளிதில் மீட்டெடுக்க முடியும்.
முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
பிறகு ஆதாரை மீட்டெடுக்க வேண்டும் என்ற உங்களுடைய தேவையை அதில் தேர்வு செய்து கொள்ளவும்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்களுடைய முழு பெயர், மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
திரையில் தோன்றும் ரகசிய குறியீடு மற்றும் உங்கள் செல்போன் எண்ணுக்கு பெறப்பட்ட ஓடிபி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
ஓடிபி சரிபார்ப்பு செயல்முறை நிறைவு பெற்றதும் உங்கள் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் எஸ் எம் எஸ் மூலமாக ஆதார் எண் அனுப்பி வைக்கப்படும்.