
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின்விநியோகமானது ரத்து செய்யப்படும். இது தொடர்பாக முன்கூட்டியே மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் மற்றும் நத்த கரை ஆகிய இரு துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
இதனால் ஆத்தூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மஞ்சினி, வளையமாதேவி, சொக்கநாதபுரம், அக்கி செட்டிபாளையம், பழனியாபுரி, தாண்டவராயபுரம், கொத்தாம்பாடி, செல்லியம்பாளை, விநாயகபுரம், கல்லுக்கட்டு, நரசிங்கபுரம், தவளைப்பட்டி, வானபுரம், பைத்தூர், தெற்கு காடு,முட்டல், கல்லா நத்தம், காட்டுக்கோட்டை, துலுக்கனூர், சந்தனகிரி, அம்மம்பாளையம், வடக்கு காடு, புதுப்பேட்டை, கோட்டை, ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோன்று நத்த கரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட காமக்கா பாளையம், பள்ளி பாளையம், தியாகனூர், நாவலூர், புத்தூர், சிறுவாச்சூர், நாவக்குறிச்சி, பட்டுத்துறை, தென் குமரை, சார்வாய், தலைவாசல், இலப்பநத்தம், சாத்தாப்பாடி,நத்தக்கரை, பெரியேரி,சித்தேரி, வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, கோவிந்தம் பாளையம், ஆர்த்தி நகரம், ஆறகழூர் போன்ற பகுதிகளிலும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
.