தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற, 3,949 மெட்ரிக் பள்ளிகளுக்கும் தமிழக அரசின் சார்பாக ஆகஸ்ட் 4 ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என்று  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 2,199 தனியார் பள்ளிகளும், +2 தேர்வில் 1,750 தனியார் பள்ளிகளும் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

இவ்வாறு தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள் மற்றும் அப்பள்ளியின் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.