தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்த சமந்தா பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வைத்துள்ளார். இதற்கிடையில்  2017ம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2021ம் ஆண்டு விவாகரத்து முடிவை அறிவித்தனர். இந்த நிலையில்  அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீமோதெரபி சிகிச்சை குறித்து விளக்கமாக வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.

இதனையடுத்து மருத்துவர் ஒருவர், தவறான சிகிச்சை முறைகளை பரிந்துரைத்து வீடியோ வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும்  பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலளித்த சமந்தா, “சிறையில் அடைக்கும் அளவிற்கு நான் என்ன தவறு செய்தேன்? என தனது இன்ஸ்டா பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். மேலும் அதில், “நான் செய்து பார்த்தைதையே மற்றவர்களுக்கு பரிந்துரைக்கிறேன். நான் விளம்பர தூதர் அல்ல” என  கோபமாக  தெரிவித்துள்ளார்.