
பொதுவாக பறவைகள் பறப்பதை இயற்கையில் இருக்கும் அளவற்ற விந்தையை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஆனால் பறவையால் தூங்கும் பொழுதும் பறக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அல்பட்ரோஸ் என்ற பறவை தூங்கும் பொழுதும் திசை மாறாமல் இயல்பாக பறக்கிறதாம். இந்த பறவை தென்முனை பெருங்கடலிலும், வடபசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற் பறவையினம். இந்த பறவை பெரும்பாலும் வெண்ணிற கழுத்தும், பெரிய அலகும், மிகப்பெரிய இறக்கை விரிப்பும் கொண்டு காணப்படும்.
இந்த பறவைகள் வாழ்க்கையில் ஒரே ஒரு இணையை மட்டும் தான் கொண்டிருக்கும். சிலவகை பறவைகள் ஒரே பாலினத்தை சேர்ந்த இணையை கொண்டிருக்கும். இப்பறவைகள் உலகில் இருக்கும் பறவைகளிலேயே மிகப்பெரிய இறக்கைகளை கொண்டது. இந்த பறவையினம் தான் 3.7 மீட்டர் இறக்கைகள் கொண்டது. இவ்வளவு பெரிய இருக்கைகள் நீண்ட காலத்திற்கு பறக்க உதவியாக இருக்கிறது. இந்த பறவைகள் ஒரு முறை பறக்க தொடங்கி விட்டால் நிலத்தில் கால் வைக்கவே வைக்காதாம். குறைந்தபட்சம் ஒரு ஆண்டும், அதிகபட்சம் ஐந்து ஆண்டுக்கு மேலாக பறந்து கொண்டே இருக்கும் ஆற்றல் கொண்டது.