
சற்றுமுன் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்களுக்குள் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியை கட்டாயமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்பது நிபந்தனை. இந்நிலையில், வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.