வாரணாசி தொகுதியில் வென்ற பிறகு, முதல்முறையாக நாளை தொகுதி மக்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். இதன்பின், அங்கு நடைபெறும் விழாவில், பிஎம் கிசான் திட்டத்தின் 17ஆவது தவணையை விடுவிக்கிறார்.  இந்நிலையில் பிஎம் கிஷான் திட்டத்தின் 17ஆவது தவணை தொகையைப் பெற இங்கே கிளிக் செய்யவும் என்ற செய்தி வாட்ஸ்அப்பில் உலா வருகிறது.

அவ்வாறு வந்த மெசேஜ் லிங்கை கிளிக் செய்த 10 பேரின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள சைபர் கிரைம் போலீசார், போலி தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் 1930 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம்.