
சவுதி அரேபியாவில் தற்போது கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் ஹஜ் புனித பயணம் சென்ற ஜோர்டானை சேர்ந்த 14 பேர் மற்றும் ஈரானை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புனித பயணம் வந்துள்ள 2760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். பக்ரீத் திருநாளான இன்று ஹஜ் புனித பயணம் சென்ற பயணிகள் உயிரிழந்து உள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.