தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் பிரதீப் கே.விஜயன். இவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தெகிடி, இரும்புத்திரை, லிஃப்ட் மற்றும் டெடி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

தன்னுடைய குண்டான உடல் தோற்றத்துடன் கொடுத்த கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தி நடிப்பில் தனித்துவம் பெற்றவர். இவர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.