மதுரை தொகுதியின் எம்பி ஆக சிபிஎம் கட்சியின் சு. வெங்கடேசன் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் எம்பி ஆவதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளார். அதன்படி மதுரை தொகுதியில் அவர் 2,41,805 வாக்குகளுடன் தொடர்ந்து அவர் முன்னிலை வகிக்கிறார்.

அதன் பிறகு அதிமுக வேட்பாளரான சரவணன் 1,20,357 வாக்குகளும், பாஜக கட்சியின் வேட்பாளர் ராம சீனிவாசன் 1,17,593 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சத்யா தேவி 52,439 வாக்குகளும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர். மேலும் மதுரையில் சு. வெங்கடேசன் தொடர்ந்து முன்னிலை வகிப்பதால் அவர் மீண்டும் எம்பியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.