
தமிழக போக்குவரத்து காவலர் ஒருவருக்கும் தெரு நாய் ஒன்றுக்கும் இடையே உள்ள பாச காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பொதுவாகவே விலங்குகளில் நன்றி உள்ள ஜீவனாக இருப்பது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் தான். அவை செய்யும் சேட்டைகள் சற்று அதிகமாகவே இருக்கும். ஒருவேளை சாப்பாடு வைத்து விட்டாலே நம்மை பார்க்கும் நேரம் எல்லாம் வாலை ஆட்டிக் கொண்டு வரும்.
அதனைப் போலவே வீட்டில் குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாப்பதில் கவனம் இல்லாமல் இருந்தாலும் நாயின் கவனம் குழந்தை மீது தான் இருக்கும். இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி உள்ள வீடியோவில் போக்குவரத்து காவலருக்கும் நாய்க்கும் இடையேயான அழகான பிணைப்பை கூறும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. பணியில் இருக்கும் போக்குவரத்து காவலரின் கால்களை சுற்றுச்சுற்றி வருவதுடன் மிகவும் அழகாக விளையாடவும் செய்கின்றது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க