அதிமுக கட்சி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் அதில், ஜூன் 4க்கு பிறகு அதிமுக கட்சி எங்கு இருக்கிறது என நீங்கள் பார்க்க தானே போகிறீர்கள். எத்தனை இடத்தில் ஜெயிக்கப் போகிறார்கள். பிஜேபி எத்தனை இடத்தில் ஜெயிக்கப் போகிறது. அதாவது விளக்கு அணையும் போது பிரகாசமாக தான் எரியும் என்று சொல்வார்கள். ஏன் விமர்சனங்கள் கடுமையாக வருகிறது என்றால், அந்த விளக்கு அணைய போகிறது என்று அர்த்தம்.

ஜூன் நான்காம் தேதிக்குப் பிறகு நானும் இங்கு தான் இருக்க போகிறேன். நீங்களும் இங்கே இருக்கே போகிறீர்கள். நானும் முடிவை பார்க்க போகிறேன். நீங்களும் பார்க்கப் போகிறீர்கள். அன்றைய தேதிக்கு தமிழகத்தில் மக்களுடைய மனதில் எந்த கட்சி பிடித்து இருக்கிறது எந்த கட்சியினுடைய வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள் அப்போது எல்லாருக்கும் தெரியும் என தெரிவித்துள்ளார்.