
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 11 வயதுடைய 8-ம் வகுப்பு சிறுவன் பயங்கரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நேற்று இந்த வழக்கில் 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
அதாவது 11 வயது சிறுவனின் தங்கையிடம் 17 வயது சிறுவன் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளான். இதனால் அவரை சிறுவன் தட்டி கேட்டுள்ளான். இதனால் அந்த சிறுவன் 11 வயது சிறுவனை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கு கைதான சிறுவனின் தாயாரும் உடந்தை. இவர்கள் மயிலாடுதுறையில் பதுங்கியிருந்த நிலையில் நேற்று காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் காரைக்காலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.