தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை   விடுத்துள்ளது வானிலை மையம்.