இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில் ரயிலில் பயணிக்கும் பெரும்பாலானவர்களுக்கு அபாய சங்கிலி குறித்து தெரிந்திருக்கும்.

இதைப் பிடித்து இழுத்தால் ரயில் ஓட்டுனருக்கு சிக்னல் கிடைத்து அவர் ரயிலை நிறுத்துவார் என்று நாம் நினைப்போம். ஆனால் அது தவறு. அதாவது ரயில் பெட்டிகளில் உள்ள அபாய சங்கிலிகள் பிரேக் பிரஷர் உடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும். அதைப்பிடித்து இழுக்கும்போது பிரஷர் ரிலீஸ் ஆகி ரயிலின் வேகம் படிப்படியாக குறைந்து தானாகவே நிற்கும். மேலும் அபாய சங்கலியை பிடித்து இழுத்தால் ரயில் தானாக நிற்குமே தவிர ஓட்டுனருக்கு சிக்னல் கிடைத்து அவர் ரயிலை நிறுத்துவார் என்று நினைப்பது முற்றிலும் தவறானது ஆகும்.