
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் 2 லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் முதலாவது ஆட்டத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 222 ரன்கள் குவித்த நிலையில் அடுத்ததாக களம் இறங்கிய பெங்களூர் அணி 221 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் பெங்களூர் அணியில் தொடக்கவீரராக களம் இறங்கிய விராட் கோலி முதல் பதிலேயே பவுண்டரி அடித்து 2 சிக்ஸர்கள் அடித்தார்.
அவர் 18 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஹர்சித் ராணா வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தில் கேட்ச் முறையில் அவுட் ஆனார். இந்த பந்து இடுப்புக்கு மேலே செல்வது போல் தெரிந்ததால் நடுவர் அவுட் ஆனதாக அறிவித்ததற்கு விராட் கோலி அவருடன் வாக்குவாதம் செய்தார். அதாவது ரிவியூவில் அவர் கிரீசுக்கு வெளியே நிற்பது தெரிந்தது. இதனால் அவர் ரிவ்யூவில் பந்தை அடிக்காமல் விட்டால் ஸ்டம்ப் லைனில் பந்து சரியாக செல்வது போல் தெரிந்தது. இதனால்தான் விராட் கோலி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். இந்த போட்டி முடிந்த பிறகும் கூட விராட் கோலி நடுவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக விராட் கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. மேலும் அதன்படி அவருடைய கட்டணத்தில் 50% அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.