
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் ஹிந்தி சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் குஷி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை சமந்தா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் வெள்ளை நிற உடையில் கையில் வாட்ச் அணிந்தபடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அந்த போட்டோவில் சமந்தா அணிந்திருந்த வாட்ச்சின் விலை தற்போது தெரியவந்துள்ளது. அது Serpenti spiga ஆகும். மேலும் அதன் விலை சுமார் 70 லட்ச ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது.