
தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்ட மீரா ஜாஸ்மின் 9 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை உயிரிழந்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீரா ஜாஸ்மின் பகிர்ந்ததோடு தனது தந்தையுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.