தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் அடுத்தடுத்து வெற்றி படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். குறிப்பாக ஊதா கலர் ரிப்பன் உனக்கு யாரு அப்பன் பாடல் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த ஸ்ரீதிவ்யா ஆறு ஆண்டு இடைவேளைக்கு பிறகு ரெய்டு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு திரும்பினார்.

இந்த நிலையில்  தற்போது பட வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. தமிழ் சினிமாவில் மீண்டும் முக்கிய இடத்தை பிடித்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்றும், அதுவரை திருமண பேச்சுக்கே இடமில்லை என உறுதியாக உள்ளாராம் ஸ்ரீதிவ்யா.