நடிகை வனிதா விஜயகுமார் நடிகர் விஜயகுமார், மஞ்சுளா இவர்களின் மகள். இவர் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இதனை தொடர்ந்து பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பிரபலம் ஆனார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதனால் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளானார். அதன் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக இந்த திருமணத்திலிருந்து விவகாரத்தை பெற்றார்.

கடந்த வருடம் பீட்டர் பால் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவரிடம் தொகுப்பாளர் திருமணம் குறித்த கேட்ட கேள்விக்கு பதில் அளித்த வனிதா, இதுவரை சட்டப்படி இரண்டு முறை தான் திருமணம் செய்துள்ளேன். மூன்றாவது முறையும் திருமணம் செய்ய வேண்டும் மூன்றாவது திருமணம் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரிடம் மாப்பிள்ளை கருப்பா இருக்கணுமா? இல்ல சிகப்பா இருக்கணுமா? என்று கேள்வி எழுப்ப அதற்கு பச்சையா இருக்கணும் என்று கடுப்பாக பதில் அளித்துள்ளார்.