
இந்திய சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களுடைய மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு இந்திய அளவில் கூகுளில் டிரெண்டான படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படம் முதல் இடத்தில் உள்ளது.
இதனையடுத்து கட்டார்-2 திரைப்படம் 2-வது இடத்திலும், ஓபன் ஹைமர் திரைப்படம் 3-வது இடத்திலும் இருக்கிறது. அடுத்ததாக ஆதி புரூஸ் திரைப்படம் 4-வது இடத்திலும், பதாம் 5-வது இடத்திலும், தி கேரளா ஸ்டோரி 6-வது இடத்திலும் உள்ளது. அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயலர் திரைப்படம் 7-வது இடத்திலும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் 8-வது இடத்திலும், டைகர் 3 திரைப்படம் ஒன்பதாவது இடத்திலும், வாரிசு திரைப்படம் பத்தாவது இடத்திலும் இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க மக்களின் மனதை கவர்ந்த திரைப்படங்களும் இருக்கிறது. அதன் அடிப்படையில் கவின் நடிப்பில் வெளியான டாடா, சசிகுமார் நடிப்பில் வெளியான ஆயோத்தி, மணிகண்டன் நடித்த குட் நைட், விக்ரம் பிரபு நடித்த இருகப்பற்று, விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி, சித்தார்த்தின் நடிப்பில் வெளியான சித்தா, ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.