
புயல் பாதிப்புக்கான ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகையை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது தொடர்பாக இன்று முதல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ‘மிக்ஜாம்’ புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கவும், இதனை ரேஷன் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
நிவாரணம் வழங்குவதற்காக ரேஷன் கடைகளில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள், நிவாரணத்தை முறையாக கொண்டு சேர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுக்கு இன்று முதல் பயிற்சி வழங்கப்படுகிறது.