
தமிழ் திரையுலகில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை படித்த மாணவ மாணவிகளை ஒன்று திரட்டி அவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார். விஜய் அவர்கள் இவ்வாறு அடுத்த தலைமுறையினரை சந்தித்தது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் விஜயை போன்றே மற்றுமொரு முக்கிய பிரபலம் மாணவர்களிடம் நிகழ்ச்சி ஒன்றும் மூலமாக பேச இருக்கிறார். அதாவது நடிகர் விஷால் அவர்கள் கடந்த சில வருடங்களாக தேவி அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மாணவ மாணவிகளின் மேற்படிப்புக்கு வருடம் தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறார்.
இதன் மூலம் 300 மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் போன்றே விஷாலும் அறக்கட்டளை மூலம் பயன்பெறும் மாணவ மாணவிகளையும் அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து விழா ஒன்று நடந்த திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.