
மேயாத மான், ஆடை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ரத்தினகுமார் தற்போது குழு குழு திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக சந்தானம் நடித்துள்ளார். அதுல்யா சந்திரா மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருக்கின்றார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இந்த படம் சென்ற வருடம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் இந்திய பிரதமர் என குறிப்பிட்டு இருந்த காட்சியை எந்தவித விளக்கமும் இல்லாமல் சென்சார் போர்டு நீக்கி உள்ளது.
இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் ரத்தினகுமார் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, திரைப்பட சென்சாரில் தன்னிச்சையாக காட்சிகளை நீக்குவது நியாயமற்ற விஷயம். குலு குலு திரைப்படத்திற்கு இது நடந்தது என்பதால் மட்டும் நான் இதை தெரிவிக்கவில்லை. ஜனநாயகத்தில் கலை மிக முக்கியமான தூண். அதன் மீது நீங்கள் மிகவும் கடுமையாக நடந்துக்கிறீர்கள். தமிழ்நாட்டை தமிழகம் என மாற்றுவதற்கு பதில் இந்தியாவை யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என பெயர் மாற்றம் செய்து விடுங்கள் என தனது ஆதங்கத்தை பதிவிட்டு இருக்கின்றார்.