
பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ராவும் நடிகை கியாரா அத்வானியும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் சில நாட்களுக்கு முன்பாக இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரியக்கார் அரண்மனையில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் குடும்பத்தார், பிரபலங்கள் என சிலர் மட்டுமே பங்கேற்றார்கள்.
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இவர்களின் திருமணத்திற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். இவர்கள் திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக வெளியிடத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் கியாரா மற்றும் சித்தார்த் மல்கோத்ரா தம்பதிக்கு ஆர்சி 15 படக்குழு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்கள். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகின்றது. சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ஆர்சி 15 திரைப்படத்தில் கியாரா அத்வானி நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Team #RC15 #SVC50 wishes @SidMalhotra and @advani_kiara a very happy married life!
Wishing you a lifetime of happiness, love and light❤
Megapower Star @AlwaysRamCharan @shankarshanmugh @DOP_Tirru @MusicThaman @SVC_official pic.twitter.com/GsppqJ8sgI
— Sri Venkateswara Creations (@SVC_official) February 13, 2023