
பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ராவும் நடிகை கியாரா அத்வானியும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் சில நாட்களுக்கு முன்பாக இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரியக்கார் அரண்மனையில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் குடும்பத்தார், பிரபலங்கள் என சிலர் மட்டுமே பங்கேற்றார்கள்.
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இவர்களின் திருமணத்திற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். இவர்கள் திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக வெளியிடத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் முக்கியமாக கவனம் ஈர்த்துள்ளது கியாரா அணிந்து வந்த தாலி தான். Sabyasachi Mukherjee என்ற கலெக்ஷனில் இருந்து வந்த அந்த தாலியின் விலை 2 கோடி ரூபாய் என செய்தி வெளியாகி இருக்கின்றது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
#sidharthmalhotra and #kiaraadvani leave their Delhi home. They are expected to arrive in Mumbai. Snapped at the Delhi airport is the beautiful couple 😍❤️ @viralbhayani77 pic.twitter.com/YlGajG8bY3
— Viral Bhayani (@viralbhayani77) February 11, 2023