உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய் நடிப்பில் சென்ற 11ஆம் தேதி ரிலீசான வாரிசு திரைப்படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் இந்த திரைப்படம் வெளியான 11 நாட்களில் 250 கோடி வசூல் செய்ததாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஆரம்பமானது. இந்த படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா வேடம் எனவும் அவருக்கு வில்லனாக ஆறு முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. இதனால் விஜய் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கின்றது.

இத்திரைப்படத்தில் விஜயுடன் சேர்ந்து சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றார்கள். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் கதாபாத்திர புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இத்திரைப்படத்தில் நடிக்கும் கௌதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், நடிகை பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்டோரின் கதாபாத்திர புகைப்படம் வெளியாகியுள்ளது.