சுற்றுச்சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என பத்து வருடங்களுக்கு முன்னர் கோரிக்கை எழுந்தது. இதனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் தற்போதைய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இதற்கான நிதிகளை அரசிடம் இருந்து பெற்று தந்தார். இந்த சாலை 33 கிலோமீட்டர் தூரம் அமைய இருக்கின்றது.

இதற்கான பணி சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை 50% பணிகளே நிறைவு பெற்றிருக்கின்றது என கூறும் அதிகாரிகள் பணிகளை இந்த வருடம் இறுதிக்குள் முடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த சுற்றுச்சாலை வருகின்ற 2024 ஆம் ஆண்டு சுற்றுச்சாலை பணி தொடங்கி அந்த வருடமே பயன்பாட்டிற்கு வரும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.