வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் தீவிர நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வடகொரியாவின் சர்வாதிகாரி அவரது மோசமான வாழ்க்கை முறையால் கலக்கமடைந்துள்ளதாகவும் இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகிய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிம் ஜாங் உன் கடந்த வாரம் தான் 39 வயதை எட்டினார். நீண்ட காலமாக பொதுமக்களை சந்திக்காமலும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலும் இருக்கின்றார் கிம் ஜாங் உன்.

இதனால் அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன. தென் கொரியாவில் உள்ள வடகொரிய மருத்துவர் கிம் ஜாங் உன் மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் குடிபோதையில் அடிக்கடி அழுவதாக கேள்விபட்டதாக மருத்துவர் ஜினுவா கூறியுள்ளார். கிம் ஜாங் உன்னின் மனைவியும் அவரது மருத்துவர்களும் சர்வாதிகாரியை சமாதானப்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் மேலும் உடற்பயிற்சி செய்யவும் அவரது உடல் நிலையில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.