அஜித்தை பிரபல தயாரிப்பாளர் திட்டியதாக மற்றொரு தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜன-11ம் தேதி ரிலீஸ் ஆகின்றது.

இந்த நிலையில் அஜீத் குறித்து பல தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வருகின்றது. அதன்படி பிரபல தயாரிப்பாளர் காஜா மொகிதீன் அஜித் குறித்து பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகின்றது. அவர் கூறியுள்ளதாவது, ஆனந்த பூங்காற்றே திரைப்படத்திற்காக அஜித்தை புக் செய்ய ஒரு படபிடிப்பு தளத்திற்கு நானும் இயக்குனரும் சென்றிருந்தோம். அப்போது அஜித்தை ஒரு பிரபல தயாரிப்பாளர்  திட்டியதால் கண் கலங்கி நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் அஜித்தை ஆனந்த பூங்காற்றே திரைப்படத்தில் புக் செய்தோம் என தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பிரபல தயாரிப்பாளரின் பெயரை அவர் தெரிவிக்கவில்லை குறிப்பிடத்தக்கது.