பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் ஹம்ஜாபூர் என்ற பகுதி உள்ளது. இங்கு முகமது கலிமுல்லா நுரானி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் 80 வயது ஆகிறது. இவருக்கு திருமணம் ஆகி இரு மகன்கள் இருக்கும் நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் முகமதுவின் மனைவி இறந்த நிலையில் அவர் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் வயதான காலத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என முகமது எண்ணியுள்ளார்.

இதனால் அவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி இவர் ஒரு 25 வயதுடைய பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த பெண்ணின் பெயர் ரேஷ்மா பர்வீன் ஆகும். மேலும் இவர்களுடைய திருமண வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தள்ளாடும் வயதிலும் முகத்தில் புன்னகை பூக்க இளம்பெண்ணை முதியவர் ஒருவர் கரம் பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.