90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சேனலான கார்ட்டூன் நெட்வொர்க் கடந்த 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் இது அமெரிக்காவின் பார்ட்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி சேனலாகும். இந்த சேனல் மூடப்படுவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆர் ஐ பி கார்ட்டூன் நெட்வொர்க் என்ற ஹேஸ்டெக் இரண்டாகி வருகின்றது.

கடந்த வருடமும் சேனல் மூடப் போவதாக இதுபோல வதந்தி பரவிய நிலையில் கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவில், நாங்கள் இன்னும் இங்கேதான் இருக்கிறோம். எங்களுக்கு 30 வயது தான் ஆகின்றது. நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம், கார்ட்டூன்களாக உங்கள் இல்லங்களில் நாங்கள் எப்போதும் இருப்போம் என்று பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.