தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமான பாடப்பிரிவுகளில் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில் வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை சிறப்பு பயிற்சிக்கான நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பாடப் பிரிவு வல்லுனர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 2000 ரூபாய் வீதம், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு சிறப்பு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் வீதமும் மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான இந்த திட்டத்திற்கு 96.71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.