மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. தேர்தலில் தபால் ஓட்டுக்களை பயன்படுத்துவதற்கான தகுதி வயது 80-லிருந்து 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தேர்தல் விதிகள் 1961 இன் 27A பிரிவு திருத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2020 பீகார் சட்டசபை தேர்தல் முதல் தற்போது வரை 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மூத்த குடிமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளும் தேர்தலின் தபால் ஓட்டுக்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.