மகாராஷ்டிரா மாநிலத்தில் 37 வயதுடைய பெண் தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். நேற்று காலை கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பெண் தனது மகளை இழுத்துக் கொண்டு அறைக்கு சென்றார். அந்த அறையில் இருந்து பால்கனிக்கு சென்று விடலாம். இந்த நிலையில் பால்கனிக்கு சென்று பெண் 23-வது மாடியில் இருந்து தனது 8 வயது மகளை தூக்கி வீசினார். அதன் பிறகு அந்த பெண்ணும் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த கோர சம்பவத்தில் தாயும் மகளும் துடிதுடித்து உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தாய் மற்றும் மகளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் மனநல பாதிப்பால் அவதிப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.