
தமிழக அரசின் கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு 1962 என்ற கட்டணமில்லா கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை எங்கள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இந்த சேவைக்கான ஓட்டுனர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
இதில் உதவியாளர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பயிற்சி வகுப்பினை முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவர்களுக்கு மாதம் ரூ.15725 சம்பளமாக வழங்கப்படும். இதேபோன்று ஓட்டுநர் பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். அதோடு உயரம் 162.5 செ.மீ இருக்க வேண்டும். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.15,820 வழங்கப்படும். மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 9150084170, 9840365462 என்ற தொலைபேசி நம்பர்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்.