தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதி ஒரு முடிவடையும் நிலையில் புதிய தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் 6 மாநிலங்களவை வேட்பாளர்களுக்கு திமுகவுக்கு 4 சீட்டும், அதிமுகவுக்கு 2 சீட்டும் ஒதுக்கப்பட்டது.

நேற்று திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் வேட்பு மனுதாக்கல் செய்தார். அப்போது அவர் தன்னுடைய சொத்து விவரங்கள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில் தன்னுடைய மொத்த சொத்து மதிப்பு 305.55 கோடி என்று தெரிவித்துள்ள நிலையில் இதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு 59.60 கோடி என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு 245.86 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போக அவரிடம் பிஎம்டபிள்யூ, மகேந்திரா பொலிரோ, மெர்சிடிஸ் பென்ஸ், லக்சஸ் ஆகிய நான்கு கார்கள் இருக்கிறது. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு 8.43 கோடி ஆகும். மேலும் இதுபோக தனக்கு 50 கோடி கடன்  இருக்கிறது என்றும் தன்னுடைய கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு என்றும் கூறியுள்ளார்.