
சினிமாவில் ஒரு படத்தை பொறுத்தவரை நான்கு முதல் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருக்கும். முந்தைய கால சினிமா படங்களில் பத்து பாடல்கள் வரை இடம்பெற்றிருக்கும். ஆனால் ஒரே படத்தில் 72 பாடல்கள் இடம் பெற்றுள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி இந்திய சினிமா படத்தில் 72 பாடல்களை பெற்று உலக அளவில் சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் சினிமா துறையின் மார்க்கெட் அதிகம். இதனால் பல வெளிநாடுகளில் இந்தியாவை மையப்படுத்தி சினிமா எடுத்து வருகிறது.
கடந்த 1932 ஆம் ஆண்டு இந்திரசபா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தான் 72 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. ஜமாஹெட்ஜி மற்றும் ஜஹாங்கீர் மதன் ஆகியோர் இந்திரசபா படத்தை இயக்கியுள்ளனர். இந்த படத்தில் நிசார், ஜெஹ்ராணா கசான், அப்துல் ரகுமான் காபுலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். அந்த காலத்திலேயே இந்திரசபா படத்தில் 72 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இதுவரை இந்த படத்தை விடவும் கூடுதல் பாடல்கள் எந்த படத்தில் இடம் பெற்றது கிடையாது. இன்று வரை 72 பாடல்கள் ஒரே படத்தில் எப்படி வைக்கப்பட்டது என்று இந்திய திரையுலகமே அந்த படத்தை திரும்பி பார்க்கிறது.