
தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களின் நடித்தவர்தான் நடிகர் ரவிக்குமார். 71 வயதான இவர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் இயற்கை ஏய்தினார்.
கேரளாவின் திருச்சூரை பூர்வீகமாக கொண்ட ரவிக்குமார் 1975 ஆம் வருடம் தொடங்கி 2024 ஆம் வருடம் வரை சுமார் 50 வருடங்கள் கலைத்துறையில் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.