
அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் காமெரென் டர்னர்-மெக்கன்சி காப்லி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களின் ஏழு மாத பெண் குழந்தை எலிசா டர்னர். இவர்கள் வீட்டில் செல்லமாக ஒரு பிட்ஃபுல் நாயை வளர்த்து வந்துள்ளனர். இந்த நாய் எப்போதும் குழந்தையின் அருகே இருக்கும் நிலையில் திடீரென அந்த குழந்தையை அது கடித்து குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த தகவலை குழந்தையின் தாய் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் எங்களால் இந்த விஷயத்தை நடந்தது என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கண்ணீரோடு கூறியுள்ளார். அதோடு குழந்தையின் தந்தையும் என் மகள் இல்லாமல் நான் எப்படி வாழ்வேன் என்று வேதனையோடு பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.